• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னூறுல எதுவும் நடக்கல…நானூறுலயாவது எதாவது நடக்குதான்னு பார்ப்போம்!

June 24, 2017 tamil.samayam.com

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் யுவராஜ் சிங் மற்றொரு சாதனை படைத்தார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று துவங்கிறது. இதில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் முதலில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இப்போட்டியில் இடம் பெற்றுள்ள,இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இன்று தனது 400வது சர்வதேச போட்டியில் பங்கேற்கிறார். இதுவரை 40 டெஸ்ட்+ 302 ஒருநாள் + 58 டி-20 போட்டி என ஒட்டு மொத்தமாக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் தனது 300வது ஒருநாள் போட்டியில் விளையாடிய யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இப்போட்டியிலாவது அவர் அசத்துவார் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க