சிறந்த பிரபலங்களுக்கான போர்ப்ஸ் இந்தியா பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவில் 30 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த பிரபலங்கள் பட்டியலை, ‘போர்ப்ஸ் இந்தியா’ தனது இணையதளத்தில் வெளியிட்டது. இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கடந்த 2016ல் அறிமுகம் ஆன குஜராத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தற்போது இந்திய அணியின் முன்னணி பவுலராக உள்ளார். இதேபோல, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ‘ஆல் ரவுண்டர்’ ஹர்மன்பிரீத் கவுர், உலக கோப்பை தொடரில், அரையிறுதியில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணி பைனலுக்கு செல்ல உதவினார். இதைத்தவிர, ‘பிக் பாஷ்’ பெண்கள் தொடரில் ஒப்பந்தம் ஆன முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார்.
இவர்களைத் தவிர, இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா, துப்பாக்கி வீராங்கனை ஹீனா சித்து என, போர்ப்ஸ் பட்டியலில் நான்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பேர் இடம் பிடித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு