July 10, 2018
தண்டோரா குழு
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இதில் காலிறுதி போட்டிகள் முடிந்து,இன்று முதல் அரையிறுதி போட்டிகள் துவங்கவுள்ளது.இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் பிரான்ஸ்,பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.இதில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.தோல்வியடையும் அணி, மூன்றாவது இடத்துக்குகான போட்டிக்கு முன்னேறும்.இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால்,இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.