• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ளே ராஜினாமா

June 20, 2017 தண்டோரா குழு

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி எதிரொலியாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த வருடம் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே நியமிக்கப்பட்டார்.ஓராண்டிற்கு மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட அவரது பதவி காலம் கடந்த மாதமே நிறைவடைந்தது.

இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கும்ளேவே பயிற்சியாளராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் படுதோல்வி அடைந்தது.இந்த தோல்வியின் எதிரொலி பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே இன்று திடீரேனே ராஜினாமா செய்தார்.

கேப்டன் விராத் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ளேவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க