• Download mobile app
07 Dec 2025, SundayEdition - 3588
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூசிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா திடீர் விலகல்?

February 3, 2020 தண்டோரா குழு

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5 – 0 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 தொடரில் விளையாட வில்லை. அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், ஐந்தாவது டி20 போட்டியில் அவர் களமிறங்கி 60 ரன்களை குவித்தார்.அப்போது ஒரு விரைவு சிங்கிளை எடுக்கும் போது அவருக்கு கெண்டைச் சதையில் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஆனார்.

இந்நிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ-யைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் பெயரை வெளியிடாது பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
.

மேலும் படிக்க