பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் ஏழாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்,பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார்.இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஆனந்த் 1 புள்ளி பெற்றார்.இதன் மூலம் இதுவரை 6 போட்டியில் பங்கேற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த்,3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்),நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்),அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோர் ‘டாப்-3’ இடங்களில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு