• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா

June 27, 2018 தண்டோரா குழு

உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் நைஜீரியாவை வென்றது.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் அர்ஜென்டினா – நைஜீரியா அணிகள் விளையாடின. அர்ஜென்டினா அணி ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வியும்,ஒரு போட்டியில் டிராவும் அடைந்த நிலையில் அடுத்தச் சுற்றுக்கு நுழைய இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டி இருந்தது.

இதையடுத்து நடைபெற்ற ஆட்டத்தில்,அர்ஜென்டினா ஒரு கோலும்,நைஜீரியா அணி ஒரு கோலும் அடித்தது. இந்நிலையில் போட்டி டிராவில் முடிந்து,அர்ஜென்டினா அணி வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அர்ஜென்டினா அணியின் ராஜோ,கடைசி 4 நிமிடத்திற்கு முன்பு மான கோலை அடித்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெறச் செய்தார்.இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க