• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பையும் நானே பொறுப்பேற்கிறேன் – ஸ்டீவ் ஸ்மித்

March 29, 2018

பந்தைச் சேதப்படுத்திய செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில்,ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.இதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர்  பதவி பறிக்கப்பட்டது. அதைபோல் ஐபிஎலிலும் இருவரின் கேப்டன் பதவி பறிக்கபட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.மேலும்,கிரிக்கெட் விளையாட ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 

“நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பையும் நானே பொறுப்பேற்கிறேன். என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது. அணி கேப்டன் என்ற முறையில் நான் தோற்றுவிட்டேன். எனது நாட்டை முன்னிலைப்படுத்துவதற்கான பெருமையைப் பெற்றிருந்தேன். கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. அது மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் படிக்க