• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனி நிற்கும் போது யாரும் கிரீஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் – ஐசிசி டுவீட்

February 4, 2019 தண்டோரா குழு

ஸ்டெம்புக்கு பின்னால் தோனி நிற்கும்போது பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் என ஐசிசி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கீப்பிங் செய்யும் முறையை பார்த்து உலகில் பலரும் பாராட்டி வருகின்றனர். அதைப்போல் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து தோனி சாதனையும் புரிந்துள்ளார். இதற்கிடையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, கிரீஸைவிட்டு வெளியேவந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசமை, கண் இமைக்கும் நேரத்திற்குள் ரன் அவுட் ஆக்கினார்.

இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், தங்களுக்கு ஏதாவது கிரிக்கெட் அறிவுரை இருந்தால் கொடுங்கள் என ஐசிசியின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார். அதற்கு ஐசிசி, ஸ்டெம்பிற்கு பின்னால் தோனி நிற்கும்போது, பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸைவிட்டு காலை எடுக்காதீர்கள் என பதில் அளித்திருந்தது.

ஐசிசியின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

மேலும் படிக்க