• Download mobile app
13 Jun 2026, SaturdayEdition - 3776
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனியை புகழும் பாகிஸ்தான் ரசிகர் – ’சாச்சா சிகாகோ’!

June 15, 2019 தண்டோரா குழு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தியது. நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துள்ளன. இதற்கிடையில், பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிர் என்ற சாச்சா சிகாகோ-வுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, இலவசமாக டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளார். தோனி அவருக்கு 2011 ஆம் வருட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்தே, இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க, தோனி அவருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார்.

இதுபற்றி முகமது பஷிர் அளித்த பேட்டியில்,

‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க, நான் இங்கிலாந்து வந்துள்ளேன். இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கு ரூ.80 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் வரை கொடுக்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். இது நான் சிகாகோ திரும்பும் விமான டிக்கெட் தொகைக்கு சமமான ஒன்று.ஆனால், இந்த போட்டிக்காக டிக்கெட் வாங்க நான் கஷ்டப்படவில்லை. அதற்கு காரணமான தோனிக்கு நன்றி. அவர் பிசியாக இருப்பார் என்பதால் அவரை போனில் அழைப்பது இல்லை. மெசேஜ் அனுப்பி அவருடனான எனது பழக்கத்தை தொடர்ந்து வருகிறேன். டிக்கெட் தருவதாக தோனி கூறியதாலேயே இங்கு வந்தேன். தோனி மனிதநேயம் மிக்கவர். எனக்கு இலவசமாக டிக்கெட் கிடைப்பதை அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.

தோனிக்கு இந்த முறை ஆச்சரியமான நினைவுப்பரிசை கொண்டு வந்திருக்கிறேன். அதை பின்னர் வழங்க இருக்கிறேன். இந்திய தேசிய கொடியின் வண்ணத்தை உடலில் வரைந்தபடி வரும் இந்திய ரசிகர் சுதிரும் நானும் ஒரே அறையில் தங்க இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்கள்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருகிறது’ எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க