• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா விலகல்

September 24, 2019 தண்டோரா குழு

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி அன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகத் தரவரிசையில் நெ.1 பவுலராக இருப்பவர் பும்ரா. பும்ராவின் துல்லியமான பந்துவீச்சை முன்னாள் வீரர்கள் உட்பட அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இந்தியா – தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணியின் அபார பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு, முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. வழக்கமான பரிசோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அவருக்குப் பதில் உமேஷ் யாதவ் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் இந்திய அணி களமிறங்குவது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க