• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தல’ தோனிக்கு முன்னாடி நான் பச்சா தான்: ‘பினிஷிங்’ பற்றி பாண்டியா!

September 25, 2017 tamilsamayam.com

இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காக தான் இத்தனை வருஷமா காத்திருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என முன்னிலையில் இருந்தது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூரில்(செப் 24)நடைப்பெற்றது. இதிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியது. இதில் கடைசிவரை நிற்க முடியாமல் போனது வருத்தம் அளித்ததாக ஆட்டநாயகன் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாண்டியா கூறுகையில்,

‘நேற்றைய போட்டியில் முன்னதாக களமிறங்குவேன் என எதிர்பார்க்கவில்லை. அதனால் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த விரும்பினேன். ஆனால் கடைசி வரை நின்று போட்டியை முடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. தோனியை ஒப்பிடும் போது அந்த விஷயத்தில் நான் இன்னும் பச்சா தான்.’ என்றார்.

மேலும் படிக்க