• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ்யா”-ஹர்பஜன் சிங்

April 19, 2018 தண்டோரா குழு

தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ்யா” என சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஹர்பஜன் சிங். இவர் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தமிழில் டுவீட் செய்து டுவிட்டரை கலக்கி வருகிறார்.இந்நிலையில்,தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் புனேவிற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து,புனேவில் நாளை நடக்கும் ராஜஸ்தான்-சென்னை அணி போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான சென்னை சூப்பா் கிங்ஸ் ரசிகா்கள் சிறப்பு ரயில் மூலம் இன்று புனே புறப்பட்டனர்.

இந்நிலையில்,இது குறித்து ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்,பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை”.அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை!நீங்க வேற லெவல் மாஸ் யா @ChennaiIPL@CSKFansOfficial அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் #pune get ready எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க