டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.ஒரு விக்கெட் எடுத்தால் இந்திய அணி வெற்றி என இருந்த போது
போதிய வெளிச்சம் இல்லாததால் இப்போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை எடுத்து ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஷ்வின். 619 விக்கெட்டுகள் எடுத்து அனில் கும்ளே
முதல் இடத்திலும், 434 விக்கெட்டுகள் எடுத்து கபில் தேவ் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்