• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ!!

July 17, 2018 தண்டோரா குழு

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகி,ஜூவன்டஸ் அணியில் இணைந்துள்ளார்.

போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ,ஸ்பெயின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார்.கடந்த 2009 ஆம் ஆண்டு,மான்செஸ்டர் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய ரொனால்டோ,இதுவரை அந்த அணிக்காக 451 கோல்களை அடித்து,அந்தக் கிளப் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

9 சீசன்களாக ரியல் மாட்ரீட் அணிக்காக விளையாடும் ரொனால்டோ,இதுவரையில் அந்த அணியின் 16 கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.ரியல் மாட்ரீட் கிளப்பின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வீரராக மாறியுள்ள ரொனால்டோ,அந்த அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்,ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணியிலிருந்து விலகி,இத்தாலி கிளப் அணியான ஜூவன்டஸ் அணிக்கு மாற உள்ளதாக கூறப்பட்ட நிலையில்,இன்று அவர் அதிகாரப்பூர்வமாக ஜூவான்டஸ் அணியில் இணைந்துள்ளார்.ஜூவான்டஸ் அணி சுமார் 100 மில்லியனுக்கு, 4 ஆண்டுகளுகுக் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்று நடைபெற்ற ஜூவான்டஸ் அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில்,ரொனால்டோவின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டதோடு,ரொனால்டோ வுடானான செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க