• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக இருந்த வெங்கடேஷ் பிரசாத் திடீர் ராஜினாமா

March 4, 2018 tamilsamayam.com

ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக கடந்த 30 மாதங்களாக செயல்பட்டு வந்த வெங்கடேஷ் பிரசாத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அண்மையில் ஜூனியர் உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனைப் படைத்தது. முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் இந்த ஜூனியர் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழு தலைவராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.இதுகுறித்துப் பிசிசிஐ தலைவர் சி கே கன்னா கூறுகையில், “வெங்கடேஷ் பிரசாத் ராஜினாமா குறித்த காரணத்தை அவரின் கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஒருவேளை அவர் வேறு ஏதேனும் பொறுப்பை ஏற்பதற்காக ராஜினாமா செய்திருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

ஜூனியர் அணி தேர்வுக்குழுவில் உள்ள 6 உறுப்பினர்களில் வெங்கடேஷ் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க