July 3, 2018
தண்டோரா குழு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றது பெல்ஜியம்.
21வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கின்றன.இதில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில்,முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான்,பெல்ஜியம் அணிகள் மோதின.இதன் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை.இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் ஹராகுச்சி மற்றும் 52வது நிமிடத்தில் இனூய் கோலடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.
இதனைத்தொடர்ந்து பெல்ஜியத்தின் வெடோன்கென் மற்றும் பெலானி கோலடிக்க 2-2 என சமநிலை பெற்றது.கடைசி நிமிடத்தில் பெல்ஜியத்தின் சாதல் கோலடிக்க 3-2 என பெல்ஜியம் த்ரில் வெற்றி பெற்றது.