• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொந்த மண்ணில் கடைசி போட்டியில் தெறிக்கவிட்ட கிறிஸ் கெயில்

March 4, 2019 தண்டோரா குழு

சர்வதேச போட்டிகளில் இருந்து வெளியேற போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தெறிக்கவிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியான இங்கிலாந்து கடைசியாக விளையாடிய 14 தொடர்களில் 12 தொடர்களை வென்று, பலவீனமான அணி என்று கருதப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டிகளுக்கு கம்பேக் கொடுத்த கெயில் சிறந்த பவுலர்களை கொண்ட இங்கிலாந்து அணியை தெறிக்கவிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான 4 இன்னிங்க்ஸில் 134.17 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய அவர் 412 ரன்கள் குவித்தார். 106 பேட்டிங் சராசரி, 2 சதங்கள், 2 அரைசதங்கள் என வரலாற்றில் மிகச்சிறந்த தொடராக கெயிலுக்கு அமைந்தது. தனது சொந்த மண்ணில் விளையாடும் கடைசி தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு முடிவை அறிவித்து தனது சொந்த மண்ணில் கடைசி தொடரை விளையாடிய கெயிலின் ஆட்டத்தில் சில பந்துகள் மைதானத்திற்கு வெளியே சென்றது.

இது குறித்து கெயில் கூறுகையில்,

ரசிகர்களை சந்தோஷ படுத்தவே இறங்கி விளையாடினேன். வெஸ்ட் இண்டீஸ் அணி தான் நம்பர்.1 அணி”. இந்த சீருடையை அணிந்து கொண்டு சொந்த மண்ணில் நான் விளையாடும் கடைசி போட்டி இது. மிகவும் கௌரவமாக இருக்கிறது.

கடைசி போட்டியில் கூட 27 பாலில் 77 ரன் எடுத்து பேயாட்டம் ஆடினார் கெயில். அடுத்து தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க