• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் விலகல்

March 17, 2018 tamilsamayam.com

சென்னை : சென்னை அணியிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னர் விலகியிருப்பது வேதனை அளிப்பதாக பவுலிங் கோச் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் சென்னை அணியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிச்செல் சாண்ட்னர் கூறியுள்ளார். அவருக்கு முலங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் 11வது சீசனில் சென்னை அணிக்காக விளையாட முடியாது என தெரிவித்துள்ளார்.

பாலாஜி வருத்தம் :
மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான மிச்செல் சாண்ட்னர் காயம் காரணமாக சென்னை அணிக்காக விளையாட முடியாது என கூறியுள்ளது வருத்தமளிக்கின்றது.

தோனிக்கு வலைப்பயிற்சியின் போது பந்துவீச வேண்டும் என ஆசைப்பட்டவர் சாண்ட்னர். ஆனால் போட்டி தொடங்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு முலங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அணிக்கு சாண்ட்னர் போன்ற மிகச்சிறந்த ஆல்ரவுண்டரின் இழப்பு மிகப்பெரியது என சென்னை அணிக்கான பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் படிக்க