• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்ன தளபதியான ராயுடு!

April 23, 2018 tamilsamayam.com

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்.,தொடரின் லீக் போட்டியில் பட்டைய கிளப்பிய அம்பதி ராயுடுவுக்கு ரசிகர்கள் புது பட்டபெயர் வைத்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது

இதில் ஹைதராபாத்தில் நடந்த 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.இதில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது.

இதில் துவக்கம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சில் தட்டுத்தடுமாறி சென்னை அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்த்தனர். இதில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல்.,தொடரின் முதல் 10 ஓவரில் குறைந்த ரன்கள் சேர்த்த அணி என மகா மட்டமான சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதில் முதல் 10 ஓவரில் சென்னை அணி பேட்டிங்கில் சொதப்பிய போதும், அடுத்த 10 ஓவர்களில் 128 ரன்கள் சேர்த்து மொத்தமாக 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது.இதில் ராயுடு 79 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதையடுத்து தான் பிறந்த மாநிலத்துக்கு எதிரான நடந்த போட்டியில் சென்னை அணிக்காக விட்டுவிளாசிய ராயுடுவுக்கு ரசிகர்கள் சின்ன தளபதி என புதுப்பெயர் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க