• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல் வலுவான நிலையில் இந்திய அணி

January 5, 2019 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி
டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர். இதில், ராகுல் 9 ரன்களிலும் மயங்க் அகர்வால்77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா சதம் அடித்து அசத்தினார். புஜாரா 7 ரன்னில் இரட்டை சத வாய்ப்பை தவறவிட்டார். 193 ரன்கள் (373 பந்துகள் 22 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். ரிசாந்த் பந்த் 159 (189 பந்துகள், 15 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் (2ம் நாள்) விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் துவக்கத்தில் நிதானமாக ஆடிய ஹாரிஸ் 79 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கவாஜா 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன் பின் ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. மார்ஷ் (8), லபூஸ்சாக்னே (38), ஹெட் (20) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்களுடனும், கம்மின்ஸ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட ஆஸ்திரேலிய அணி 386 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் இப்போட்டி இந்திய அணிக்கு சாதகமாக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க