• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிஎஸ்கே ரசிகர்களை குஷிபடுத்த வருகிறது அதிகாரப்பூர்வ சிஎஸ்கே அப்!

March 26, 2018 tamilsamayam.com

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சென்னை அணி அதிகாரப்பூர்வ சிஎஸ்கே அப் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளது.

சென்னை அணி, இரண்டு ஆண்டு தடை முடிந்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் பங்கேற்க உள்ளது. தோனி தலைமையில் களமிறங்கும் சென்னை அணியில் ரெய்னா, ஜடேஜா, முரளி விஜய், பிராவோ, டு பிளிசிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், பலம் வாய்ந்த மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதற்காக சென்னை வந்துள்ள வீரர்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையில் அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ அப் ஒன்று உள்ளது வெளியாக உள்ளது. சிஎஸ்கே அப் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அப்பில், ரசிகர்கள் சென்னை அணியின் ஜெர்சி உள்ளிட்ட மெர்சன்டைஸ்களையும், போட்டிகளுக்கான டிக்கெட்களையும் வாங்கலாம். மேலும், சென்னை வீரர்களின் பிரத்தேய நேர்காணல், சிறப்பு வீடியோக்கள் மற்றும் போட்டிகளை நேரலையாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க