• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோலி தலைமையில் ஹாட்ரிக் வெற்றி பெற்று புது சாதனை!

February 8, 2018 tamilsamayam.com

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று புது சாதனை படைத்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதலிரண்டு போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் முதலில் மார்க்ராம் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கோலி 160* அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க இந்திய அணி, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி வழக்கம் போல சகால், குல்தீப் சுழலை சமாளிக்க முடியாமல் தத்தளித்தது. அந்த அணிக்கு டுமினி (51) மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி, 40 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்து புது வரலாறு படைத்தது.

தவிர, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. எஞ்சியுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் 1 போட்டியில் இந்திய அணி வென்றால் கூட ஒருநாள் தொடரை இந்திய அணி எளிதாக கைப்பற்றிவிடும்.

மேலும் படிக்க