• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோப்பையுடன் ரசிகா்களை சந்திக்க சென்னை வருகிறது சி.எஸ்.கே

May 28, 2018 tamilsamayam.com

மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி இன்று கோப்பையுடன் சென்னை வந்து ரசிகா்களை சந்திக்கிறது.

2018 ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அந்த அணி 20 ஓவா் முடிவில் 178 ரன்கள் சோ்த்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரா் டூ பிளசிஸ் 10 ரன்களில் ஆட்டம் இழந்தாா். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் ஹைதராபாத் அணியினரின் பந்து வீச்சை 4 திசைகளுக்கும் பறக்கவிட்டாா். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அவா் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். 20 ஓவா் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதனைத் தொடா்ந்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, கோப்பையுடன் நாளை (இன்று) சென்னை சென்று ரசிகா்களை சந்திக்க உள்ளோம் என்று தொிவித்தாா்.

போட்டிக்கு முன்னா் அவா் கூறுகையில், நாங்கள் இந்த ஆண்டு எங்கள் சொந்த மண்ணில் ஒரே ஒரு போட்டியை மட்டும் விளையாடினோம். எங்கள் மண்ணில் விளையாட முடியாதது துரதிருஷ்ட வசமானது என்று தொிவித்திருந்தாா்.

மேலும் படிக்க