• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி நடைபெறும்: கங்குலி நம்பிக்கை

October 29, 2019 தண்டோரா குழு

கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக வங்காளதேச அணி நாளை இந்தியா வருகிறது.இந்தியா – வங்காளதேச அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 3-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. 10-ந்தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிவடைகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14-ந்தேதி இந்தூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது.

இதற்கிடையில், கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த பரிந்துரையை வங்காளதேசம் ஏற்றுக் கொண்டால் இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறும்.

இது தொடர்பாக பேசியுள்ள கங்குலி

கொல்கத்தா டெஸ்ட்டை பகல்-இரவாக நடத்துவது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹசனுடன் நான் பேசினேன். பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக வீரர்களுடன் பேச விரும்புவதாக அவர் தெரிவித்தார். இன்று இரவுக்குள் வங்காளதேசம் தனது முடிவை தெரிவிக்கும். கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவாக நடைபெறும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு பகல்-இரவு டெஸ்ட்டை கொண்டுவர விரும்பினார். இது தொடர்பாக கேப்டன் வீராட் கோலியிடமும் பேசி அவரது ஆதரவையும் கங்குலி பெற்றார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் முதல் மைதானம் என்ற பெருமையை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க