May 4, 2018
tamilsamayam.com
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
11வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணி கேப்டன் தோனி 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
178 ரன்களைச் சேஸ் செய்யக் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் – கிறிஸ் லின் ஆகியோர் அதிரடித் தொடக்கத்தை அளித்தனர். பின், இளம் வீரர் சுப்மன் கில் நிலைத்து நின்றி சீரான இடைவெளிகளில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். அவருடன் பேட் செய்த கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில்45 ரன்களை சேர்த்து அசத்தினார்.
இதனால்,17.4 ஓவர்களிலேயே வெறும் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது கொல்கத்தா அணி. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் நெட் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணியைப் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தையும் கொல்கத்தா அணி பெற்றிருக்கிறது. சென்னை அணி இத்தோல்வியின் மூலம் முதல் இடத்தை ஹைதராபாத் அணியிடம் பறிகொடுத்து 2வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.