December 21, 2017
tamil.samayam.com
கட்டாக் : இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையே முதல் டி20 போட்டியில் இந்திய 93 ரன்கள வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியை இந்தியா 1-0 என வென்றது. தொடர்ந்து நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா 2-1 என வென்றது.
நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 180 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்களை மட்டுமே சேர்த்தது.
சாதித்த சஹால் :
இந்தியா சார்பில் பவுலிங்கில் கலக்கிய சஹால் 4ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீத்திய வீரர்களில் முதலிடத்தை சஹால் பிடித்துள்ளார். சஹால் இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது சிறந்த பவுலிங்காக உள்ளது சஹாலை தொடர்ந்து 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரசீத் கான் மற்றும் விண்டீஸை சேர்ந்த கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.