• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிரிக்கெட் வீரர்களை விட அதிக சம்பளம் போட்டி நடுவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் பிசிசிஐ

June 2, 2018 tamilsamayam.com

இந்தியர்களுக்கு மிக பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் இந்தியாவின் மாபெரும் வெற்றி பெற்றுதான் வருகின்றன.

கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத கிரிக்கெட் வீரர்கள் கூட நல்ல சம்பளம் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை விட,உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்றும் நடுவர்களுக்கு அதிக தொகை சம்பளம் கிடைக்கும் வகையில் பிசிசிஐ சம்பள ஏற்றம் செய்துள்ளது.சமீபத்தில் பிசிசிஐ சார்பாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் ஏற்றம் செய்து ஒரு போட்டிக்கு ரூ.35,000 ஆக நிர்ணயித்தது.

இந்நிலையில் போட்டி நடுவர்களுக்கு சம்பளத்தை தற்போது பிசிசிஐ உயர்த்தியுள்ளது.அதன்படி இந்தியாவின் டாப் 20 போட்டி நடுவர்களுக்கு டி20 போட்டியை தவிர,மற்ற போட்டியில் ஒரு நாள் சம்பளாமாக கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த ரூ.20 ஆயிரத்திலிருந்து,ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயம் பிசிசிஐ பெரும் ஆண்டு வருவாயில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல், போட்டி நடுவர்களுக்கும் சிறிய சதவீதம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது என்பது கூடுதல் தகவல்.

மேலும் படிக்க