• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கானாவிடம் இந்தியா படுதோல்வி: அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது!

October 13, 2017 tamilsamayam.com

17 வயதுக்கு உட்படோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் கானா அணியிடம் இந்திய அணி படு தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தியாவில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நடத்தும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி உட்பட சுமார் 24 சர்வதேச அணிகள் பங்கேற்கிறது.

இதில் டெல்லியில் நடந்த ‘குரூப்-ஏ’ பிரிவின் லீக் போட்டியில் கானா, இந்தியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது. ஆனால் போட்டியின் துவக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டியின் 43வது நிமிடத்தில் கானா வீரர் ஆய்யா முதல் கோல் அடித்தார். இதற்கு இந்திய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் கானா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

பின் இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய கானா அணிக்கு, ஆய்யா (52) மீண்டும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து டான்சோ (86), டோக்கு (87) இரட்டை அடிகொடுக்க அந்த அணியின் வெற்றி உறுதியானது.

கடைசி வரை போராடிய இந்திய அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில் 4-0 என்ற கோல்கணக்கில் கானா அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிது. பங்கேற்ற மூன்று போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

அமெரிக்கா தோல்வி:

இதே போல நவி மும்பையில் நடந்த மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், அமெரிக்கா, கொலம்பியா அணிகள் மோதின. இதில் கொலம்பியா அணிக்கு விடால் (3), பெனலோசா (67), காய்செடோ (87) ஆகியோர் கோல் அடித்தனர். அமெரிக்க அணிக்கு அகாஸ்டா (24) ஒரு கோல் மட்டும் அடித்தார். முடிவில், கொலம்பியா அணி 3- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இந்த லீக்​கில் கொலம்பியா, கானா, அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

மேலும் படிக்க