• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கபடியில் களமிறங்கிய சச்சின்!

June 20, 2017 tamilsamayam.com

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெறும் தொழில்முறை கபடிப் போட்டியான புரோ கபடி லீக் போட்டியில், இந்த ஆண்டு 5 புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சார்பில், “தமிழ் தலைவாஸ்” என்ற பெயரில் தமிழக அணி இணை உரிமையாளராகியுள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகவும், இன்றளவும் கிராமப்புறங்களில் விளையாடப்பட்டு வரும் ஒரு விளையாட்டாக கபடிப் போட்டி உள்ளது.

ஐபிஎல் மூலம் கிரிக்கெட் போட்டியை ஊக்கப்பட்டுத்தப்பட்டதன் மூலம், இந்திய அணிக்கு புதிய இளம் வீரர்கள் பலர் கிடைத்தனர்.

அதன் பின்னர் கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் நடத்தப்பட்டு வரும் புரோ கபடிப் போட்டி தொடரின், தமிழக அணியை சச்சின் வாங்கியுள்ளார். அதர்கு ‘தமிழ் தலைவாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது பெருமையான விஷயம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கால்பந்து சூப்பர் லீக் போட்டியில், கேரளா பிளாஸ்டர் அணியின் சொந்தக்காரராக சச்சின் உள்ளார்.

மேலும் படிக்க