• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.பி.எல் ஏலம்: கலக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்!

December 19, 2019 தண்டோரா குழு

13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் தொடங்கியது. ஐபிஎல் ஏலப் பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர். ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்::

* இயான் மோர்கனை கொல்கத்தா அணி ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
* பேட் கம்மின்ஸ்-ஐ 15.50 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ்:

* மும்பை இந்தியன்ஸ் அணி கிறிஸ் லைன்-ஐ இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

* ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணி ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

* க்ளென் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது

பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ்:

* ஆரோன் பிஞ்ச்சை ரூ4.4 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.

டெல்லி கேப்பிடல்ஸ்:

* இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ்-ஐ 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.
* ஜேசன் ராயை டெல்லி அணி 1.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

சாம் கர்ரனை ரூ5.5 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி

ஏலத்தில் எடுக்காத வீரர்கள்:

* 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் புஜாராவை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை
* 50 லட்சம் ரூபாய் அடிப்படை தொகையாக இருந்த இந்திய வீரர் ஹனுமன் விஹாரியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
* இந்திய வீரர் யூசுப் பதானை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

மேலும் படிக்க