• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘என்கிட்டயே ‘டெஸ்ட்’டா: 2.91 வினாடியில் கடந்து வாயடைத்த ‘தல’ தோனி!

August 12, 2017

இந்திய அணிக்காக உடற்தகுதி தேர்வில், தல தோனி, சின்ன தல ரெய்னா ஒன்றாக பங்கேற்றுள்ளனர்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை கண்டியில் துவங்குகிறது.

இதற்கு பின் இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக 5 ஒருநாள், ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. எதிர் வரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க தொடர்களை கருத்தில் கொண்டு, இந்திய கேப்டன் கோலிக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதேபோல மற்ற சீனியர் வீரர்களான ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்ந்லையில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, சுமார் 2 வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் ரெய்னா, உள்ளிட்டோர் இலங்கை ஒருநாள், டி-20 தொடரில் பங்கேற்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க