March 5, 2018
tamilsamayam.com
உலக தடகள சாம்பியன்ஷிப் 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் சித்தாந்த் 6வது இடம் பிடித்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதில் ஆண்களுக்கான 60 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் சித்தாந்த் திங்கலயா பங்கேற்றார்.
இதன் ஹீட் போட்டியில் பந்தய துாரத்தை 7.93 வினாடிகளில் கடந்தார். இதில் இவர் 6வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
கடந்த ஆண்டில் அமெரிக்காவின் சியாட்டில் நடந்த போட்டியில் இவர் இலக்கை 7.70 வினாடியில் கடந்ந்தார்.
இந்நிலையில் பாட்யாலாவில் நடக்கும் பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.