• Download mobile app
12 Mar 2026, ThursdayEdition - 3683
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சாதனை படைத்த ராகுல்!

August 12, 2017 tamilsamayam.com

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய துவக்க வீரர் கே.எல். ராகுல் தொடர்ந்து 7 வது அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, கண்டியில் இன்று துவங்கியது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில், பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு, ராகுல், தவான் ஜோடி துவக்கம் அளித்தது.

இதில் ராகுல் 28 ரன்கள் எடுத்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை இலங்கை அணியின் குமாரா தவறவிட்டார். இதை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட ராகுல், டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தவிர டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக இவர் பதிவு செய்யும் 7வது அரைசதம் இதுவாகும்.

இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக அதிக அரைசதத்தை பதிவு செய்த வீரர்களின் உலகசாதனையை ராகுல் சமன் செய்தார். முன்னதாக, இம்மைல்கல்லை எவர்டான் வீக்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) , ஆண்டி பிளவர் (ஜிம்பாப்வே), சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), சங்ககரா (இலங்கை), கிறிஸ் ரோஜர்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் எட்டியுள்ளனர்.தவிர, இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் ராகுல்.

மேலும் படிக்க