July 4, 2018
தண்டோரா குழு
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இதில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்து,8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7ம் தேதிகளில் நடக்கின்றன.
காலிறுதியில்உருகுவே,பிரேசில்,ஸ்வீடன்,இங்கிலாந்து,பிரான்ஸ்,பெல்ஜியம்,ரஷ்யா,குரேஷியா அணிகள் விளையாடவுள்ளன.இதில் வருகிற ஜூலை 6ம் தேதி உருகுவே-பிரான்ஸ் மற்றும் பிரேசில்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.ஜூலை 7ம் தேதி ஸ்வீடன்-இங்கிலாந்து மற்றும் ரஷ்யா – குரேஷியா அணிகள் மோதுகின்றன.இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.