• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகின் அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் ரகீம் கார்ன்வால் !

August 31, 2019 தண்டோரா குழு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் விண்டீஸ் ரகீம் கார்ன்வால் அறிமுகமானார். இதன்மூலம் உலகின் அதிக எடை கொண்ட (140 கி.கி.,) கிரிக்கெட் வீரரானார்.அவரது சர்வதேச அறிமுகமானது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. உள்நாட்டு போட்டிகளில் விளையாடி வந்த இவர் நீண்ட காலத்திற்கு முன்பே தேசிய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டும், ஆனால் அவரது உடற் வாக்கு அவருக்கு வழி வகுக்கவில்லை.

இருப்பினும், இந்தியா A-க்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று தனது சுழற்பந்து வீச்சு திறன் மற்றும் பேட்டிங் திறனை நிருபித்தார். இதனையடுத்து அவரை தேசிய அணியில் சேர்க்க தேர்வாளர்கள் கட்டாயப்படுத்தினர். இதனிடையே இந்தியா டெஸ்ட் தொடருக்கு ‘ஜெயண்ட்’ கார்ன்வால் அழைக்கப்பட்டார். அதேவேளையில் கெய்ல் தேர்வு செய்யப்படவில்லை.

26 வயதான கார்ன்வால், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து உத்வேகம் பெற்று அணியில் இடம்பிடித்தார். 143 கிலோ எடை கொண்டு ராகீம் கார்ன்வால், இதுவரை சர்வதேச கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் அதிக எடை கொண்டவர் என அறிவிக்கப்படுகிறார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் வார்விக் (133 கி.கி.,), பெர்முடாவின் டுவைன் லெவராக் (127 கி.கி.,), ஜிம்பாப்வேயின் ரிச்சி கஷுலா (126 கி.கி.,), இங்கிலாந்தின் காலின் மில்பர்ன் (121 கி.கி.,), பாகிஸ்தானின் இன்சமாம் (103 கி.கி.,) உள்ளிட்டோர் அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர்களாக போட்டியில் பங்கேற்றனர். நேற்று புஜராவை அவுட்டாக்கியதன் மூலம், டெஸ்ட் அரங்கில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார்.

மேலும் படிக்க