• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

August 16, 2019 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை பிசிசிஐ ஆலோசனை குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளவர் ரவி சாஸ்திரி. இவரது பதவிக்காலம் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ரவி சாஸ்திரியுடன் சேர்த்து பேட்டிங், பவுலிங், பிஸியோ என அனைத்து விதமான பொறுப்புக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

நேர்காணலுக்கான 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை முன்னாள் கேப்டன் கபில் தேவ், அனுஸ்மான் கேக்வாத், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய மூவர் குழு தேர்வு செய்தனர். சுமார் 2000 பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ள இந்த பொறுப்புக்கு, மைக் ஹசன், டாம் மூடி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், பில் சிம்மன்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோரை தேர்வு செய்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் 6 பேரிடமும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் இன்று நேர்காணல் நடத்தியது.

6 பேரிடமும் நேர்காணல் முடிந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிசிசிஐ ஆலோசனை குழு,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை பிசிசிஐ ஆலோசனை குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். 2021-ம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடருவார் என கபில் தேவ் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

ரவி சாஸ்திரியை பொறுத்தவரை அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 70 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க