• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் சுழல் பந்துவீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி

October 6, 2018 தண்டோரா குழு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில், பிருத்வி ஷா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா சதம் விளாசினர். இதன் மூலம், இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 649 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 181 ரன்களுக்குள் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திர அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர், 468 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 2, ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து, முதல் போட்டியிலேயே சதம் அடித்த இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க