July 7, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான தோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
2004 -ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானவர் மஹிந்திரா சிங் தோனி.தற்போது அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில்,தோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால்,இங்கிலாந்தில் உள்ள தோனி,அங்கு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
தோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு,கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதேபோல்,சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். சமூக வலைதளங்களில் #HappyBirthdayMSDhoni என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.