• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை !

January 7, 2019 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

புஜாரா, ரிஷாந்த் சிறப்பான ஆட்டத்தால் இந்த அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 300
ரன்களில் ஆல் ஆவுட்டானது. இதனால் ஃபாலோவான் முறைப்படி மீண்டும் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆன் பெறுவது கடந்த 31 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி ‘பாலோ–ஆன்’ வழங்குவது இது 4–வது முறையாகும்.

இதற்கிடையில், மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால், மைதானம் விளையாட முடியாத நிலையை அடைந்தது. இதனால் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் 71 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது. இது சாதாரண வெற்றி அல்ல. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. மேலும்,ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இதனால் கேப்டன் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க