• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஷஸ் முதல் டெஸ்ட்: நாதன் லயன் சுழலில் சுருண்டது இங்கிலாந்து அணி – ஆஸ்திரேலிய வெற்றி

August 5, 2019 தண்டோரா குழு

பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பரிமிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கம் முதலே அடுத்தடுத்த விகேட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தின் (144) அபார சதத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேர்ன்ஸ் (133) சதத்தால் 374 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. ஸ்மித் (142), மேத்யூ வடே (110) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 487 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 13 ரனகள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் படிக்க