• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆர்ச்சரால் 3-வது போட்டியில் இருந்து விலகிய ஸ்டீவன் ஸ்மித்

August 20, 2019 தண்டோரா குழு

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. லண்டனில் நடந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

இப்போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், ‘பவுன்சர்’ பந்து தாக்கி காயமடைந்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஒரு பந்து எகிறிச் சென்று அவரது கழுத்தை பயங்கரமாக பதம் பார்த்ததில் ஸ்டீவன் சுமித் நிலைகுலைந்து கீழே சரிந்தார். மைதானத்தை விட்டு வெளியேறிய அவர் சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு தைரியமாக மீண்டும் களம் இறங்கி 92 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து கழுத்து பகுதியில் மேற்கொண்டு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை துல்லியமாக அறிய ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து அவர் விலகினார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மார்னஸ் லபுஸ்சேன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார். அபாரமான ஃபார்மில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித், காயம் காரணமாக விலகியிருப்பது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க