• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு பதில் தினேஷ் கார்த்திக்!!

June 2, 2018 தண்டோரா குழு

இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இதையடுத்து,ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டி,வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் விளையாடும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஹாவின் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.இதனால் சஹா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் சஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

இவர் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அதன்பின் 8 ஆண்டுகளுக்குப் பிறகு,சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க