July 7, 2018
தண்டோரா குழு
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றுள்ளது.
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இதில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்து,நேற்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் பிரான்ஸ் அணி,உருகுவே அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தில் முதல் பகுதியில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணியும், பிரேசில் அணியும் மோதியது.முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் ரீனட்டோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார்.முடிவில் பெல்ஜியம் அணி,2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.