• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அய்யோ பாவம்… பாக்கும் போதே பரிதாபமா இருக்கு…. தட்டுத்தடுமாறும் விண்டீஸ்!

October 5, 2018 tamil.samayam.com

விண்டீஸ் அணி 555 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி, அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அறிமுக வீரராக களமிறங்கிய இளம் பிர்த்வீ ஷா (134), சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. கோலி (72), பண்ட் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

3 பேர் சதம்:

இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, கேப்டன் கோலி (139), ரவிந்திர ஜடேஜா (100*) ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். ரிஷ்ப் பண்ட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் எடுத்த போது, டிக்ளேர் செய்தது.

தத்தளிக்கும் விண்டீஸ்:

இதையடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணி, இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், அந்த அணி 94 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்து தத்தளித்து வருகிறது.

இதையடுத்து விண்டீஸ் அணி 555 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி, அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

மேலும் படிக்க