November 21, 2019 
தண்டோரா குழு
                                மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 டி-20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 3 டி2௦ மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி 
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஸ் பாண்டே, ரிஷப் பன்ட், சிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாகார், சமி, புவனேஸ்வர் குமார் 
டி2௦ தொடருக்கான அணி 
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஸ் பாண்டே, ரிஷப் பன்ட், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாசிங் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாகார், சமி, புவனேஸ்வர் குமார்
அணியில் தோனி இடம் பெறுவார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.