• Download mobile app
05 Mar 2021, FridayEdition - 1850
FLASH NEWS
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

April 17, 2019 தண்டோரா குழு

இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி வருமாறு:

இயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயின் அலி, ஆதில் ரஷீத், லியாம் பிளங்கெட், டாம் கரன், டேவிட் வில்லே, மார்க் உட்.

மேலும் படிக்க