• Download mobile app
21 Jul 2019, SundayEdition - 1257
FLASH NEWS
  • வேலூர் தேர்தல்… பணத்தை பதுக்கி வைத்திருக்கிறது திமுக – ஏ.சி.சண்முகம்
  • வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் 67 பேர் உயிரிழப்பு
  • ‘உறுதியாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு- மாநில தேர்தல் ஆணையம்’
  • கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

இந்திய அணியின் காத்திருப்பு பட்டியலில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட்!

April 17, 2019 தண்டோரா குழு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களுக்கான பட்டியலில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் மே மாதம் 30 -ஆம் தேதி தொடங்கவுள்ள ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டனர்.விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் மாற்று வீரர்களுக்கான (காத்திருப்பு) பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக இப்பட்டியலில் கலீல் அகமது, அவிஷ் கான், தீபக் சாஹர் ஆகிய பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.போட்டி தொடர் நடைபெற்று வரும்போது, அணி வீரர்களுக்கு எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு அல்லது காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்களுக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் படிக்க