• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலியாவில் 2020ல் நடைபெறும் டி20 உலகக்கோப்பை அட்டவனை வெளியீடு

January 29, 2019 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆடவர் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 24 முதல் நவம்பர் 15 வரை நடைபெற உள்ளது. அதன்படி அக்டோபர் 24 முதல் நவம்பர் 8 வரை லீக் சுற்றுப்போட்டிகளும், நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இருநாட்களும் அரையிறுதிப் போட்டிகளும், நவம்பர் 15 தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 45 போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டனையை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் 2 வில், இந்திய அணியோடு இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. மேலும் தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் 2அணிகள் இந்த குரூப்பில் இடம்பெறும். அதைபோல் குரூப் 1ல் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணியின் விளையாடவுள்ள போட்டி விவரங்கள்

அக்டோபர் 24 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா (பெர்த்)
அக்டோபர் 29 – இந்தியா – தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் 2 ஆம் இடத்தில் உள்ள அணி. (மெல்போர்ன்)
நவம்பர் 1- இந்தியா – இங்கிலாந்து. (மெல்போர்ன்)
நவம்பர் 5 -இந்தியா – தகுதிச்சுற்றில் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ள அணி. (அடிலெய்ட்)
நவம்பர் 8 – இந்தியா – ஆப்கானிஸ்தான் (சிட்னி)

மேலும் படிக்க