• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யோகேஷ்வர் தத்தின் லண்டன் ஒலிம்பிக் வெண்கல மெடல் வெள்ளியாக மாறுகிறது

August 30, 2016 தண்டோரா குழு

மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வாங்கிய வெண்கலப் பதக்கத்திற்கு பதில் வெள்ளிப் பதக்கம் அளிக்கப்படுகிறது.ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷவர் தத் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.

ஆனால்,2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அவர் 60 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து அவருக்கு வெண்கலப் பதக்கத்திற்கு பதில் வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட உள்ளது.

லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ எடை பிரிவில் ரஷ்யாவைச் சேர்ந்த பெசிக் குடுகோவ்(27) வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் பெசிக் கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார்.ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது சேகரித்த பெசிக் உள்பட 5 வீரர்களின் சிறுநீர் மாதிரிகளைச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு பரிசோதனை செய்தது.அதில் பெசிக் உள்பட 5 வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க